NewsNews Updates திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்! by alpha.immanuel@gmail.com March 27, 2025 by alpha.immanuel@gmail.com March 27, 2025 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 35 ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது. இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பண்டிட் குயின்’ படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா. ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடத்தப்பட்டேன். காளியின் சாராம்சமே கடும் தியாகங்கள் தான். படக்குழுவினரும் தங்களுடைய கடும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். மேலும், படத்திற்கான தியாகங்களுக்கு காளி நிச்சயம் வெற்றி தருவாள் என்ற உறுதியுடன் உள்ளனர். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது” என்றார். Post Views: 11 previous post ’டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! next post “I had traveled a long way from Chambal to Kulasekara Patnam,” says Seema Biswas.