NewsNews Updates விஜய் தேவரகொண்டாவின் VD 12 படத்தின் தலைப்பு ‘கிங்டம்’ பட டீசர் ரசிகர்களுக்கு மாஸ்டர் பீஸ் அனுபவத்தை தருவதை உறுதியளிக்கிறது! by alpha.immanuel@gmail.com February 13, 2025 by alpha.immanuel@gmail.com February 13, 2025 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 18 கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘VD12’, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் தலைப்பு தற்போது ‘கிங்டம்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது. தீவிர ஆக்ஷன் மற்றும் உணர்வுகள் நிரம்பிய படமாக இது உருவாகியுள்ளது. சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையிலான த்ரில்லர் மற்றும் பிரம்மாண்ட திரையனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் வழங்க இருக்கிறது. டீசரில் ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும் சூர்யா தமிழுக்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான கதையாக இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. ‘ஜெர்ஸி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் தின்னனுரி இந்த முறை விஜய் தேவரகொண்டாவை முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் காட்ட இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த டீசர் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை திருப்திபடுத்தும் வகையில் அமைந்து, உற்சாகத்தை அதிகரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைக்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்குநராக அவினாஷ் கொல்லா பணியாற்றுகிறார். ஜோமோன் டி.ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன் இருவரும் ஒளிப்பதிவு செய்கின்றனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் பேனரில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிக்கின்றனர். மே 30, 2025 அன்று திரையரங்குகளில் ‘கிங்டம்’ படம் வெளியாகிறது. தொழில்நுட்ப க் குழு விவரம்: எழுத்து, இயக்கம்: கௌதம் தின்னனுரி,தயாரிப்பாளர்கள்: நாக வம்சி எஸ் – சாய் சௌஜன்யா,இசை: அனிருத் ரவிச்சந்தர்,ஒளிப்பதிவு: ஜோமோன் டி ஜான் ஐஎஸ்சி, கிரிஷ் கங்காதரன் ஐஎஸ்சி,எடிட்டர்: நவீன் நூலி,தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா,ஆடை வடிவமைப்பாளர்: நீரஜா கோனா,நடன இயக்குநர்: விஜய் பின்னி,ஆக்ஷன்: யானிக் பென், சேத்தன் டிசோசா, ரியல் சதீஷ்,தயாரிப்பு:சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் பேனரில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர். previous post NEEK Audio Launch: A Star-Studded Celebration Filled with Excitement and Gratitude! next post Grand Pre-Release Event of ‘Dragon’ Creates Electrifying Buzz at ITC Grand Chola!