NewsNews Updates இன்றைய தலைப்புச் செய்திகள்! by alpha.immanuel@gmail.com May 27, 2025 by alpha.immanuel@gmail.com May 27, 2025 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 15 ‣ கனமழையால் உதகை அருகே பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிப்பு. பலத்த காற்றால் விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் ‣ திட்டமிட்டப்படி வரும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்திய பள்ளிக்கல்வித்துறை. மாணவர்கள் வரும் போது பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தல். ‣ தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன்19ல் தேர்தல். ஜூன் 2-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ‣ தொடர் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. இரண்டு நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி வரை உயர்வு. ‣ சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக கூட்டணியே முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையோ, ஒருமைப்பாடோ இல்லை என்றும் இந்தியா டுடே இதழ் விமர்சனம். ‣ அமித் ஷாவை பார்ப்பதற்காக 3 கார்களில் மாறி மாறி சென்றது ஏன்? என எடப்பாடி பழனிசாமி விளக்கம். பாகிஸ்தான் உள்துறை அமைச்சரை பார்க்க சென்றதை போல விமர்சிப்பதாகவும் ஆதங்கம். ‣ இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே வாரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு. மக்கள் அச்சப்பட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தல். ‣ மராட்டியத்தில் வெளுத்துவாங்கிய கனமழையால் பல இடங்களில் கரைபுரண்ட வெள்ளம். ராய்காட் மாவட்டத்தில் அருவியின் மேலே ஏறி தவித்த 5 பேர் பத்திரமாக மீட்பு. ‣ திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம். தடுப்புச் சுவரில் நடந்து சென்ற சிறுத்தையில் வீடியோ பரவும் நிலையில் பக்தர்கள் அச்சம். ‣ காசா போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க திட்டத்தை ஏற்க ஹமாஸ் சம்மதம். அமெரிக்காவின் திட்டத்தை ஏற்க முடியாது என இஸ்ரேல் அறிவித்ததால் தொடரும் போர். ‣ ஐ.பி.எல். லீக் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல். புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது பஞ்சாப். Post Views: 10 previous post Celebrating The Timeless Legacy of Na. Muthukumar: A Tribute Concert next post Kingdom Boys – Ep 01👑